மோடியின் ‘மன வலி’ முதல் ‘பிடிவாத’ பிரக்யா வரை | மைக் டெஸ்டிங் @ மார்ச் 5, 2024

“தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவுடன் போதைப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பது மனதை வலிக்கச் செய்கிறது.” - பிரதமர் மோடி

“அதிமுக - புதிய தமிழகம் இடையே கூட்டணி உறுதியானது. எங்களுக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பது குறித்த பேச்சுவார்த்தை தொடர்கிறது.” - புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி

“பிரதமர் மோடியின் பொய் மூட்டைகள், மொத்த வியாபாரம் யாவும் தமிழக மக்களிடம் விலை போகாது.” - இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்

“திமுக உடன் கசப்பு ஒன்றும் இல்லை. ஒருபோதும் தொகுதிகள் எண்ணிக்கையில் காங். விட்டுக் கொடுக்காது. அவர்களும் எங்களை விட மாட்டார்கள்” - தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

“ஒரு பேய் ஆட்சி செய்தால் அந்த நாடு எப்படி இருக்குமோ, அதேபோல இன்றைக்கு தமிழகத்தில் திமுகவின் ஆட்சி ஒரு சாட்சி.” - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

“குடும்பம்தான் முதலில் என்பதுதான் இண்டியா கூட்டணி தலைவர்களின் கருத்தியல். நாடுதான் முதலில் என்பதுதான் மோடியின் கருத்தியல்.” - பிரதமர் மோடி

“தமிழக திட்டங்களுக்கு தரவேண்டிய தொகையை மத்திய அரசு தருவதில்லை. பிரதமர் மோடி திமுகவை தாக்கி பேசுவது எல்லாம் அரசியல்.” - அமைச்சர் துரைமுருகன்

“தமிழனுக்கு உலகம் முழுவதும் பெருமை சேர்த்துக் கொண்டிருப்பவர் பிரதமர் மோடி. நமது குடும்பத்தின் உறுப்பினர் அவர்” - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

“பிரதமர் மோடி எனக்கு பெரிய அண்ணன் போன்றவர். குஜராத் போலவே தெலங்கானா வளர்ச்சிக்கும் பிரதமர் மோடி உதவவேண்டும்” - தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

“பிரதமர் மோடி தமிழகத்துக்கு குடிபெயர்ந்து வந்தால் கூட வாக்கு விழப்போவது இல்லை. இங்குள்ள மக்கள் மோடியை ஏற்க மாட்டார்கள்” - திமுக எம்.பி கனிமொழி

“தற்போது அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக உள்ள பாமகவின் மாம்பழம், தேமுதிகவின் முரசு சின்னத்தை நான் கேட்டால் தந்துவிடுவார்களா?” - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

“என்னுடைய சுயசிந்தனையின் அடிப்படையில் சில கருத்துகளை பேசுகிறேன். இதில் என்னை மாற்றிக் கொள்ள முடியாது.” - பாஜக எம்.பி பிரக்யா தாக்குர்

Web Stories

மேலும் படிக்க...