அண்ணாமலை முதல் உதயநிதி வரை | மைக் டெஸ்டிங் @ மார்ச் 1, 2024

“நாங்கள் ‘80 தொகுதிகளிலும் தோற்கடிப்பீர்; பாஜகவை அகற்றுவீர்’ எனும் முழக்கத்தை உ.பி. மக்களிடம் சேர்ப்போம்” - சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்

“உதயநிதி ஸ்டாலினின் அப்பா பெயரையும், தாத்தா பெயரையும் எடுத்துவிட்டால் அவரால் இரண்டு ஓட்டுகள் வாங்க முடியுமா?” - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

“நாங்கள் திமுகவுடன் தோழமையோடு இருக்கின்றோம். நாங்கள் கெஞ்சவும் வாய்ப்பில்லை, திமிராக நடக்கவும் வாய்ப்பில்லை” - தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை

“ஏழைகளின் துன்பம், துயரம் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு புரியாது” - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

“அரசியல் சாணக்கியர் என்று வர்ணிக்கப்படும் பிரதமர் மோடி, இமாச்சல் ஆட்சி கவிழ்ப்பு விவகாரத்தில் முழு தோல்வி அடைந்துவிட்டார்” - காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

“அதிமுக மீதான அச்சத்தால் திமுக அவசர அவசரமாக தொகுதிப் பங்கீட்டை முடிக்கிறது; இது ஒரு தோல்வி பயம்தான்” - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

“வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் காஸ் சிலிண்டர் விலை ரூ.2,000 வரை உயரலாம்; அதன்பிறகு நமக்கு விறகு அடுப்புதான்!” - மம்தா பானர்ஜி

“மக்களவை தேர்தலில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம்” - முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

“இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு முஸ்லிம் வாக்காளர்களின் ஆதரவு அதிகரிக்கும்” - மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

“உண்மையில் பாஜகவின் மாநில டீம் அதிமுக. அதிமுகவின் தேசிய டீம் பாஜக” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Web Stories

மேலும் படிக்க...