திமுக தலைவர்கள் Vs பிரதமர் மோடி @ மைக் | மைக் டெஸ்டிங் @ பிப்.29, 2024
“காங்கிரஸ் எந்தக் காலத்திலும் சீட்டுகளுக்காக யாரிடமும் கெஞ்சியது இல்லை” - தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை
“தேர்தலுக்கு முன் சம்மன்கள் அனுப்பப்படுகிறது. சிபிஐ ‘பாஜகவின் செல்’ போல செயல்படுகிறது” - சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்
“வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் இரக்கமற்று ஓர் அரசாட்சியை நடத்தி வரும் மோடிக்கு திமுகவைக் குறை சொல்ல எந்தத் தகுதியும் இல்லை” - முதல்வர் மு.க.ஸ்டாலின்
“தமிழகம் வந்த மோடி, எங்களை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை; நாங்கள் ஒரே குடும்பத்துக்குள் இருக்கிறோம்” - ஓபிஎஸ்
“பாஜக வட இந்தியர்களின் கட்சி எனவும், மதவாத கட்சி எனவும் கூறுவது முற்றிலும் தவறானது” - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
“எம்ஜிஆர், ஜெயலலிதாவை நம்பியே பாஜக இருக்கிறது. இதற்கு அதிமுக தொண்டர்கள் இடம் கொடுக்கக் கூடாது!” - விசிக தலைவர் திருமாவளவன்
“மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் இருந்து திமுக முற்றிலும் அகற்றப்படும்” - பிரதமர் மோடி
“பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. மதம் வேறு, அரசியல் வேறு என்பது மக்களுக்கு தெரியும்” - திமுக எம்.பி கனிமொழி
“திமுகவையே இல்லாமல் ஆக்கிவிடுவாராம் பிரதமர் மோடி. இப்படிச் சொன்னவர்கள் எல்லாம் வரலாற்றில் காணாமல் போய்விட்டார்கள்” - திமுக எம்.பி டி.ஆர்.பாலு