மோடி சொன்ன ‘பிபிஎஃப்’, ‘பிள்ளை பிடிக்கும் பாஜக’... | மைக் டெஸ்டிங் @ பிப்.27, 2024
“எங்களிடம் தானாக இணைய வருகிறார்கள். பாஜகவை மதிக்கவே மாட்டோம் என்று சொன்ன அதிமுக பாஜக, பாஜக என கத்திக்கொண்டே இருக்கிறது” - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கேரளாவில் எதிரிகள். ஆனால், கேரளாவுக்கு வெளியே அவர்கள் BFF. அதாவது, Best Friends Forever” - பிரதமர் மோடி
“சிதம்பரம் மக்களவை தொகுதி என்னுடைய சொந்த தொகுதி. இங்குதான் நான் போட்டியிடுவேன். உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்” - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
“திருநெல்வேலியில் எனக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். அதனால், நெல்லை தொகுதியில் நான் போட்டியிட வாய்ப்பு உள்ளது” - சமக தலைவர் சரத்குமார்
“தமிழர்களுக்காக மத்தியில் பாடுபடும் என்ற நம்பிக்கையோடு பாஜக கூட்டணியில் இணைகிறோம்” - தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
“திமுக, அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்னை ‘லேகியம் விற்பவர்’, ‘பூச்சாண்டி’ என விமர்சிக்கின்றனர். தமிழக மக்கள் நலனுக்கான லேகியம் விற்கிறேன்” - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
“வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை புதுச்சேரி மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழிசை, நிர்மலா சீதாராமனுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்” - புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி
“மக்களவைத் தேர்தலில் பாமக நிலைப்பாடு தொடர்பாக வெளிவரும் செய்திகள் பொய்யானவை. வதந்திகள்.” - பாமக தலைவர் அன்புமணி
“பாஜகவினர் பிள்ளை பிடிப்பவர்களைப் போல அலைகின்றனர். பிள்ளை எதுவும் கிடைக்கவில்லை. இதுதான் நிலைமை. ” - அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன்