இபிஎஸ் குற்றச்சாட்டு முதல் அண்ணாமலை நம்பிக்கை வரை | மைக் டெஸ்டிங் டுடே

“மக்கள் சக்தி பெற்ற அதிமுக இயக்கத்தை உடைக்க திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார்” - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

“விஜயதரணி எம்எல்ஏ பாஜகவில் இணைவதாக வரும் தகவல் வெறும் வதந்தி. அவருடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை” - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

“தமிழக வளர்ச்சிக்காக பல திட்டங்களின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ரூ.11 லட்சம் கோடியை பிரதமர் மோடி ஒதுக்கியிருக்கிறார்.” - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

“ஒடிசாவில் தற்போது இருக்கும் நவீன் பட்நாயக் அரசு அடக்குமுறை, ஊழல், சதி, கமிஷன், கலெக்‌ஷனில் ஈடுபட்டுள்ளது” - பாஜகவில் இணைந்த முன்னாள் ஒடிசா அமைச்சர் பிரதீப் குமார்

“கர்நாடகா பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கிய காங். அரசு, இந்து கோயில்களுக்கு வரி விதித்திருப்பது கீழ்த்தரமான செயல்.” - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

“ஜெகன் எப்படிதான் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாரிசு என கூறிக் கொள்கிறார் என தெரியவில்லை” - ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா

“வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு 33 சதவீதமாக அதிகரிக்கும்” - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

Web Stories

மேலும் படிக்க...