நெஞ்செரிச்சலுக்கு தீர்வு என்ன?

நெஞ்செரிச்சலுக்கு இரைப்பையில் அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகளும், அமிலத்தைச் சமன் செய்யும் மருந்துகளும் வழங்கப்படுகின்றன.

காரம் மிகுந்த, மசாலா கலந்த, எண்ணெய் மிகுந்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பேறிய பன்னாட்டு உணவு வகைகளை ஒதுக்குங்கள்.

ஒரே நேரத்தில் வயிறு நிறையச் சாப்பிடுவதைவிட 3 அல்லது 4 மணிநேர இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லது.

கவலையாக இருக்கும்போதோ, கோபமாக இருக்கும்போதோ, சாப்பிட வேண்டாம். பேசிக்கொண்டோ சாப்பிட வேண்டாம்.

காபி / தேநீர் அடிக்கடி வேண்டாம்.

காற்றடைத்த செயற்கைப் பானங்கள், குளிர்பானங்கள், சிட்ரஸ் பழங்களை குறைத்துக் கொள்ளுங்கள்.

மோரும் இளநீரும் நல்லது.

சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள். குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப்படுக்கச் செல்லுங்கள்.

படுக்கையின் தலைப்பகுதியை அரை அடியிலிருந்து ஓர் அடி வரை உயர்த்திக்கொள்வது நல்லது.

இடது பக்கமாகப் புரண்டு படுப்பதுதான் சிறந்தது.

உடற்பருமன் இருந்தால் அதைக் குறைக்க வழி பாருங்கள். நெஞ்செரிச்சல் தொல்லை நிரந்தரமாகத் தீரும். - பொதுநல மருத்துவர் கு.கணேசன்

Web Stories

மேலும் படிக்க...