அப்பா ஆவதில் ஆண்களுக்கு பிரச்சினையா? - 12 குறிப்புகள்

ஆண்களின் விதைப்பை குளிர்ச்சியை விரும்பும் உறுப்பு. இதை உஷ்ணத்தால் உசுப்பக் கூடாது. தளர்வான உள்ளாடை அணிவீர்.

இறுக்கமான உள்ளாடை / ஜீன்ஸ் ஆடை அணிந்தால், விதைப்பையில் உஷ்ணம் அதிகரித்து, விந்தணுக்களை அழித்துவிடும்.

லேப்டாப்பை மடியில் வைத்து பணிபுரிவதை தவிர்க்க வேண்டும்.

கதிர்வீச்சு என்பது விந்தணுக்களுக்கு எதிரி. எனவே, இரவுப் படுக்கையில் செல்போனை தவிர்க்க வேண்டும்.

அலுவல் அழுத்தமும் மன அழுத்தமும் விந்தணுக்களையும் அழிக்கும் ஆபத்து மிக்கவை.

சிறுதானிய உணவுகளையும் புரத உணவுகளையும் அதிகப்படுத்த வேண்டும்.

உடற்பயிற்சி செய்வதும், உயரத்துக்கு ஏற்ப உடல் எடையைப் பராமரிப்பதும் அவசியம்.

மன அழுத்தம் தவிர்ப்பது, போதிய ஓய்வு, நல்ல உறக்கம் ஆகிய வாழ்க்கை முறைகளில் கவனம் தேவை.

புகை, மது, போதைமருந்து எனும் முப்படைத் தாக்குதல்களைத் தவிர்க்க வேண்டும்.

தரமான விந்தணு விளைச்சலுக்கு இத்தகைய சரியான அடிப்படை அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.

மருத்துவம் தேவைப்படும் ஆண்கள், ஊடகங்களில் போதிக்கும் போலி மருத்துவர்களிடம் ஏமாந்துபோகக் கூடாது.

அறமும் அனுபவமும் மிகுந்த மருத்துவர்களை அணுகினால், மலட்டுத்தன்மை மறைந்து மழலைச் செல்வத்தை சுமக்கலாம். | கைடன்ஸ் by மருத்துவர் கு.கணேசன்

Web Stories

மேலும் படிக்க...