படுத்துக்கொண்டே செல்போன் பார்ப்பது சரியா?
தொடர்ந்து பல மணி நேரம் திறன்பேசியைப் பார்த்தால், கண்கள் சோர்வடையும்; வறண்டுவிடும்.
அதேபோல், தொடர்ச்சியாக பல மணி நேரம் செல்போன் பார்த்தால் தலைவலி வரும். அதன்பின் பார்வை குறையும்.
அரை மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து திறன்பேசியைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
படுத்துக்கொண்டே திறன்பேசியைப் பார்ப்பதும் இருட்டில் திறன்பேசியைப் பார்ப்பதும் தவறு.
தொடர்ந்து திறன்பேசியைப் பார்க்க வேண்டியது அவசியமென்றால், அடிக்கடி கண்களைச் சிமிட்ட வேண்டும்.
அடிக்கடி கண் சிமிட்டுவதால் கண்களில் ஈரம் படியும். இது கண் எரிச்சலைத் தடுக்கும்.
திறன்பேசித் திரையில் வெளிச்சம் சரியான அளவில் இருக்க வேண்டும். திரை சுத்தமாகவும் இருக்க வேண்டும்.
கண்ணுக்கு மிக அருகில் திறன்பேசியை வைத்துப் பார்க்கக் கூடாது.
கண்ணுக்கும் திறன்பேசிக்கும் இடையே 40 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும்.
20 நிமிடத்துக்கு ஒரு முறை கண்களை விலக்கி, 20 அடி தூர பொருளை 20 விநாடிகளுக்குப் பார்த்தால் கண் பாதிப்பை தடுக்கலாம்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றிய பிறகும் உங்களுக்குத் தலைவலி நீடித்தால், கண்நல மருத்துவரைப் பாருங்கள். | ஆலோசனை: மருத்துவர் கு.கணேசன்