இதயம் காக்க 10 எளிய குறிப்புகள்!
பொதுவாக, 40 வயதைத் தாண்டிவிட்டாலே, நம் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
வயிற்றில் தொப்பை விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சாப்பிடும் உணவின் அளவைக் குறைக்கத் தொடங்க வேண்டும்.
தினமும் தேவையான அளவு உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
போதுமான அளவு தூங்க வேண்டும்; எக்காரணத்தைக் கொண்டும் தூக்கத்தின் அளவைக் குறைக்கக் கூடாது.
ஜப்பானியர்கள் சிறுவயதிலிருந்தே முக்கால் வயிறுக்குச் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் காரணமாக, ஜப்பானியர்களின் உடலில் கொழுப்பு தங்குவதில்லை; உடல் எடை குறைகிறது; ஆயுளும் கூடுகிறது.
நமது முன்னோர் பழமொழி இதற்கு ஒரு படி மேலே சென்று ‘அரை வயிறுக்குச் சாப்பிடு’ என்று சொல்கிறது.
சாப்பிடும் உணவின் அளவை 40 வயதுக்குப் பின்னர் குறைப்பது இதயப் பாதுகாப்பை உறுதிசெய்யக் கண்டிப்பாக உதவும்.
வாழ்நாள் முழுவதும் பின்பற்றப்படும் நன்முயற்சிகளே நமது நலத்தை மேம்படுத்தும்; ஆயுளையும் நீட்டிக்கும். | தகவல்: மருத்துவர் எம்.அருணாசலம்