ஆயுள் நீட்சிக்கு உத்தரவாதம் தரும் உடற்பயிற்சி

மனித உடலில் குறைந்தபட்ச மாக 650 தசைகள் உள்ளன. ஆனால், இன்றைய உட்கார்ந்திருக்கும் வாழ்க்கைமுறையால், அவை பயனற்றதாக மாறிவிட்டன.

காலத்தால் எட்டு மணி நேரம் நாற்காலியில் அமர்ந்து பணியாற்றும் சூழல். உட்கார்ந்திருக்கும் வாழ்க்கைமுறையின் காரணமாக நமது உடல் பல நோய்களை எதிர்கொள்கிறது.

நாற்காலியில் அமர்ந்து பணி செய்பவர்களின் மரண விகிதம், புகைப்பவர்களின் மரண விகிதத்தைவிட அதிகம். ஆம், புகையிலை பழக்கத்தைவிட, உட்கார்ந்திருக்கும் பழக்கம் மிகவும் ஆபத்தானது.

இவை இணைந்தால் நம் வாழ்நாள் மட்டும் சூறையாடப்படாது; நம் வாழ்நாள் முழுமையும் பலதரப்பட்ட நோய்களின் கூடாரமாக மாறும்.

அதிர்ச்சியளிக்கும் ஆய்வுகள்: தொடர்ச்சியாக 11 மணி நேரத்துக்கு நாற்காலியில் அமர்ந்து பணிபுரிபவர்களில் 40% அடுத்த மூன்று ஆண்டுகளில் கடுமையான உடல்நல பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

நான்கு மணி நேரத்துக்குக் குறைவாக நாற்காலியைப் பயன்படுத்தியவர்கள் மட்டுமே இது போன்ற ஆபத்துகளிலிருந்து தப்பிக்கின்றனர்.

நாற்காலியில் 4 மணிநேரம் அமர்வதும், 8 மணி நேரம் அமர்வதும் மாரடைப்பு நோய் ஏற்படும் ஆபத்தை அதற்கேற்ப கூட்டவோ குறைக்கவோ செய்யும்.

தினமும் 1 மணி நேரம் செய்யப்படும் உடற்பயிற்சி அல்லது வாரம் ஒருமுறை செய்யப்படும் கடுமையான உடற்பயிற்சி மனிதர்களின் ஆயுள்காலத்தை நான்கு ஆண்டுக்காலம் அதிகரிக்கிறது.

12 மணி நேரம் நாற்காலியில் அமர்ந்திருக்கும் பணியில் இருப்பவர், உடற்பயிற்சி செய்தாலும், பயிற்சியின் மூலம் கிடைக்கும் நன்மையைவிட நாற்காலியில் அமர்வதால் ஏற்படும் மாரடைப்பின் ஆபத்தே அதிகம்.

உடற்பயிற்சி, உடலில் உள்ள பல கோடிக்கணக்கான அணுக்களையும், குரோமோசோம்களையும் புதுப்பித்து, அவற்றில் ஆயுளை அதிகரிக்கும். இதன் காரணமாக நலம் கிடைக்கிறது. | ஆக்கம்: டாக்டர் இ.சுப்பராயன்

Web Stories

மேலும் படிக்க...