வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப சரியான நேரம் எது? ஏன்?

நாம் பயன்படுத்தும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப சரியான நேரம் அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரம்.

கொள்கலன் மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும் சூரியனின் வெப்பத்தால் எரிபொருள் வெப்பமடையும்போது அதன் அடர்த்தி குறையும். என்ஜினுள் செல்லும்போது அது சரியாக எரியாமல் போகலாம்.

சூடான என்ஜினுள் செலுத்தப்படும் எரிபொருள் வெப்பநிலையில் செல்லும். என்ஜினின் கம்ப்ரஷன் சேம்பரில் ஸ்பார்க் ஆகும் எரிபொருளானது சரியாக எரியாமல் போகலாம். மைலேஜ் குறைய இதுவும் காரணம்.

பூமி குளிர்ந்த நிலையில் இருக்கும்போது எரிபொருள் அடர்த்தியாக என்ஜினுள் செலுத்தும்போது அது முழுமையாக எரியும். என்ஜினின் செயல்திறனும் சிறப்பாக இருக்கும்.

பகலில் பெட்ரோல் டாங்கினை திறக்கும் போது உள்ளே ஆவியாக இருக்கும் எரிபொருள் வெளியேறவும் வாய்ப்பு உண்டு. காலை (அ) மாலையில் நிரப்பலாம்.

Web Stories

மேலும் படிக்க...