வானம் ஏன் நீல நிறமாக இருக்கிறது?
வானம் ஏன் நீல நிறமாக இருக்கிறது? - அறிவியல் உலகை நமது இந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்த மிக முக்கியமான கேள்வி.
இந்தக் கேள்விக்கு சரியான விளக்கம் அளித்தவர், நம் இந்தியாவின் முதல் நோபல் பரிசு வென்ற சந்திரசேகர வெங்கடராமன்.
வானம் நீல நிறமாக தெரிவதற்குக் காரணம் ஒளிச் சிதறல். (Scattering of light)
ஒளி ஏழு வண்ணங்களை உள்ளடக்கியது. நீங்கள் காணும் வானவில்லில் தோன்றும் அந்த vibgyor. இந்த ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு அலை நீளம் கொண்டது.
நாம் காணும் இந்த வெளியில் காற்றுடன் கலந்த சிறு துகள்கள் இருக்கும். அவை ஒளியை சிதறச் செய்யும். சிதறும் ஒளியானது , ஏழு வண்ணங்களாக பிரியும். குறைந்த அலைநீளம் கொண்ட வண்ணங்களே அதிக அளவில் சிதறும்.
vibg (violet,indigo,blue,green) ஆகிய ஒளிக்கதிர்கள் yor (yellow,orange,red)-ஐ விட குறைந்த அலைநீளம் கொண்டவை. எனவே வானும் கடலும் நீல நிறத்திலேயே தோன்றும்.
நம் வளிமண்டலத்தை கடந்து வரும் ஒளிக்கதிர்களில் அதிகமாக ஊடுருவி வரும் நிறம் நீலம். மேலும் நம் கண்களை இயல்பிலேயே அதிகம் ஈர்க்கக்கூடிய நிறமும் அதுதான்.