Web Stories
தாகத்தைத் தேடும் தண்ணீர்! - வெற்றி மொழிகள் by ரூமி
1207 ஆம் ஆண்டு முதல் 1273 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ரூமி என்கின்ற மௌலானா ஜலாலுதீன் ரூமி பதிமூன்றாம் நூற்றாண்டு பாரசீக கவிஞரின் வெற்றிமொழிகளில் சில...
துயரப்பட வேண்டாம். நீங்கள் இழக்கும் எதுவாயினும் மற்றொரு வடிவத்தில் உங்களிடமே திரும்பவும் வரும்.
நாம் அனைவரும் அன்பாலேயே பிறந்துள்ளோம்; அன்பு நமது தாய்.
நீங்கள் இறகுகளுடனே பிறந்துள்ளீர்கள், ஏன் வாழ்க்கையில் தவழ்ந்து செல்ல விரும்புகிறீர்கள்?
உங்களை அச்சப்படுத்துபவர்களையும் துன்பப்படுத்துபவர்களையும் புறக்கணியுங்கள்.
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் உங்களுக்குள்ளே உள்ளது. அனைத்தையும் உங்களிடமே கேளுங்கள்.
தாகம் மட்டும் தண்ணீரைத் தேடுவதில்லை, தண்ணீரும் தாகத்தை தேடுகிறது.