நடைப்பயிற்சியின் நன்மைகள்!
நடைப்பயிற்சியின் நன்மைகள்! - நீரிழிவு நோய் கட்டுப்படும்: தினமும் நடைப்பயிற்சி செய்யும்போது, உடலில் செயல்படாமலிருக்கும் இன்சுலின் ஏற்பான்கள் தூண்டப்பட்டு, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது.
மாரடைப்பு தடுக்கப்படும்: தினமும் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாம். வேகமாக நடக்கும்போது, இதயத் திசுக்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது;
உடல் பருமன் குறையும்: ஒரு மணி நேரம் வேகமாக நடக்கும்போது உடலில் 300 கலோரி செலவாகிறது. இதன் பலனாக, உடலில் தேவையற்ற கொழுப்பு கரைகிறது.
சுவாச நோய்கள் குறையும்: நடைப்பயிற்சி என்பது காற்றை உள்வாங்கிக் கொள்ளும் ‘ஏரோபிக் பயிற்சி’ என்பதால், நுரையீரலின் சுவாசத் திறன் அதிகரித்து, சுவாச நோய்கள் கட்டுப்படுகின்றன.
மன அழுத்தம் மறையும்: நடைப்பயிற்சியினால் ‘எண்டார்பின்’ எனும் ஹார்மோன் சுரக்கிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து, மன அமைதிக்கு வழி வகுக்கிறது.
முழங்கால் வலி தடுக்கப்படும்: நடைப்பயிற்சியினால் முழங்கால் வலி வருவது தள்ளிப்போகிறது. இதற்குக் காரணம், நடைப்பயிற்சியானது மூட்டுகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது.
தினமும் குறைந்தது 30 நிமிடங்கள், அதிகபட்சமாக 1 மணி நேரம் நடக்க வேண்டும். நடக்கின்ற தூரம்தான் அளவு என்றால், தினமும் 3-லிருந்து 5 கி.மீ. தூரம் வரை நடக்க வேண்டும்.
கை கால்களை வீசி, விரல்களை விரித்து, முழங்கையை மடக்கி நீட்டிப் பயிற்சி செய்துகொண்டே நடக்கலாம். இதற்கு ‘டைனமிக் வாக்கிங்’ என்று பெயர்.