ஊட்டசத்து உணவு தேங்காய்!

ஊட்டசத்து உணவு தேங்காய்! - இளம் தேங்காயின் தண்ணீர்... இளநீர் உடல் நீர்த் தேவைக்கான எலக்ட்ரோலைட்களையும் பொட்டாசியத்தையும் தரக்கூடியது.

தேங்காய் எண்ணெயில் பாதிக்கு மேல் நடுத்தரச் சங்கிலி கொழுப்பு அமிலங்களே இருக்கின்றன. இந்த அமிலங்களை நமது உடல் கொழுப்பாகச் சேமிக்காமல், உடல் வளர்சிதை மாற்றத்துக்குத் தேவையான சக்தியாக மாற்றிக் கொள்கிறது.

தேங்காயின் சதைப் பகுதி பசியை அற்புதமாகத் தீர்க்கும். அதேநேரம் தெவிட்டவோ, சாப்பிடுவதால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றிய பயத்தையோ தருவதில்லை.

ஊட்டச்சத்து சுரங்கம்: நமது வாழ்க்கையை மேம்படுத்தும் பல பரிசுகளை தருகிறது தேங்காய். அவை: வைட்டமின் சி, இ, பி1, பி3, பி5, பி6, இரும்புச் சத்து, செலினியம், சோடியம், சுண்ணாம்புச் சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், தாமிரம்.

தேங்காய் எண்ணெயின் பயன்பாடு மிகச் சிறந்தது. உடனடியாகக் கொதித்துவிடும், அத்துடன் அதிக வெப்பத்தில் சமைத்தாலும் நன்றாகவே இருக்கும். ஒரு முறை பயன்படுத்திவிட்டு, மீண்டும் பயன்படுத்தக்கூடிய தன்மை கொண்டது.

எதுக்களித்தலில் இருந்து நிவாரணம், வைட்டமின் கிரகிப்புக்கு உதவுதல், பல்வேறு நோய்களில் இருந்து தடுத்து நமது உடல்நலத்தைப் பாதுகாப்பது ஆகியவற்றின் மூலம் தேங்காயை மிகச் சிறந்த ஊட்ட உணவு என்று நிச்சயம் சொல்லலாம்.

தோல், சருமத்துக்கு அழகு சேர்த்துப் பராமரிக்கும் தேங்காயின் மற்ற பண்புகளும் அனைவருக்கும் தெரிந்த விஷயங்கள்தான்.

Web Stories

மேலும் படிக்க...