Short news

விழுப்புரம் பாமக நிர்வாகி என்.எம்.கருணாநிதி அதிரடி நீக்கம்

திண்டிவனம் தொகுதியில் 2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை எதிர்த்து போட்டியிட்டு 2,208 வாக்குகளில் தோற்ற என்.எம்.கருணாநிதி பாமகவிலிருந்தும் வன்னியர் சங்கத்திலிருந்தும் இன்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ‘அவர் சங்கம் மற்றும் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால், அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்’ என அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

x