பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி தருமபுரி தொகுதி பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாமக வேட்பாளர் அரசாங்கத்திற்கு தொகுதியில் பெரிய அளவில் செல்வாக்கு இல்லாததால் அவர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தருமபுரியில் ஏற்கனவே அன்புமணி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால் தற்போது அவரது மனைவி செளமியா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.