Short news

உதகை: கடும் குளிரால் மக்கள் அவதி

உதகையில் இந்தாண்டின் முதல் உறைபனி பொழிவு தொடங்கியது. கடும் குளிரால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். நவம்பர் மாதம் உறைபனி தொடங்கிய ஒரு வாரத்திற்குள் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. மேலும் மாவட்டம் முழுவதும் பல இடங்களிலும் கன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில், ஒரு மாதம் கழித்து இன்று முதல் மீண்டும் உறைபனி தாக்கம் தொடங்கியுள்ளது.

x