திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோங்கல்மேடு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 46 மலைக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள், பழங்குடி இனச் சான்றிதழ் வழங்கக் கோரி வருவாய்த் துறையிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் நேற்று பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மூங்கில் கூடைகளை முடைந்து, நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.