Published : 17 May 2023 03:05 PM
Last Updated : 17 May 2023 03:05 PM

ஆஸ்திரேலியாவில் 65 பெண்களுக்கு தபாலில் வந்த பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் - குழப்பத்தில் போலீஸ்

தபால் பெற்ற பெண்களில் ஒருவர்.

கான்பரா: ஆஸ்திரேலியாவில் 65 பெண்களுக்கு தபாலில் வந்த பயன்படுத்தப்பட்ட காண்டம்களால் (ஆணுறைகள்) போலீஸார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அவற்றை அனுப்பிய நபரை / நபர்களைத் தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது,

இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறுகையில், "அனாமதேய நபரிடமிருந்து கையால் எழுதப்பட்ட சில குறிப்புகளுடன் 65 பெண்களுக்கு இதுபோன்ற தபால் வந்துள்ளது. இவை அனைத்தும் மெல்போர்னின் கிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் குறிப்பிட்ட சில பெண்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பெண்கள் அனைவருக்குமே ஏதேனும் தொடர்பு இருக்க வேண்டும். இவர்களை அந்த மர்ம நபர் திட்டமிட்டே இவ்வாறான தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளார்.

எங்கள் முதல் கட்ட விசாரணையின்படி இந்தப் பெண்கள் அனைவருமே 1999-ஆம் ஆண்டு கில்ப்ரெடா பள்ளியில் பயின்றுள்ளனர். அதனால், இவர்களின் முகவரியை மர்ம நபர் பள்ளிக்கூட ஆண்டுவிழா புத்தகத்தில் இருந்து திரட்டியிருக்கலாம்.

கடிதம் பெறப்பட்ட பெண்கள் அனைவருமே அதனுள் பயன்படுத்திய காண்டமும் இருந்ததாகக் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தி பேஸைட் பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் குழு விசாரிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆஸ்திரேலியாவின் ஹெரால்டு சன் பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில், "எனக்கு வந்த கடிதம் கையால் எழுதப்பட்ட எழுத்துகளையே கொண்டிருந்தது. ஆனால், எழுத்துகள் மிக நேர்த்தியாகவும் வித்தியாசமாகவும் இருந்தன. எனக்கு தபால் வந்த அன்றைய இரவு தூக்கமற்றதாக இருந்தது. என்னை அது மிகவும் பாதித்தது. என் தோழிகளிடம் இதுபற்றி பேசினேன். என்னைப் போல் என்னுடன் படித்த சிலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். இந்த மர்ம நபர் பற்றி யாருக்கேனும் ஏதாவது தெரிந்தால் தயவுசெய்து முன்வந்து போலீஸுக்கு உதவுங்கள்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x