Published : 07 May 2023 11:59 AM
Last Updated : 07 May 2023 11:59 AM
டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ஒரு வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபரையும் போலீஸார் சுட்டு வீழ்த்தினர்.
இந்தச் சம்பவம் குறித்து டெக்சாஸ் போலீஸ் தலைவர் ப்ரயன் ஹார்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், "டெக்சாஸ் நகரில் ஆலன் பகுதியில் ஆலன் ப்ரீமியம் அவுட்லெட்ஸ் என்ற வணிக வளாகம் உள்ளது. இங்கு திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். இதில் ஒரு குழந்தை உள்பட 9 பேர் பலியாகினர். காயங்களுடன் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரும் கொல்லப்பட்டார்" என்றார். காயமடைந்தவர்களில் 5 முதல் 61 வயதிலான நபர்கள் உள்ளனர் என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபாட் கூறுகையில், "வார்த்தைகளால் விவரிக்க முடியாத துயரம் நடந்துள்ளது. உள்ளூர் போலீஸாருக்கு எல்லா உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளோம்" என்றார்.
இதுவரை 193 உயிர்கள் பறிபோயின.. 2023 ஆம் அண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை அமெரிக்காவில் 198 பேர் பல்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் இறந்துள்ளனர். கன் வயலன்ஸ் ஆர்கைவ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்தத் தகவல்களை திரட்டி தொகுத்து வருகிறது. இந்த அமைப்பின் தரவுகளின்படி இதுவரை 2016ல் தான் ஒரே ஆண்டில் அதிபட்ச துப்பாக்கிச் சூடு உயிரிழப்புகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT