Published : 28 Sep 2017 03:58 PM
Last Updated : 28 Sep 2017 03:58 PM
வடகொரியாவை உளவு பார்த்ததாக தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு பின் உடல்நிலை மோசமடைந்ததால் விடுவிக்கப்பட்டு மரணமடைந்த அமெரிக்க இளைஞர் ஒட்டோ வார்ம்பியர் உடலில் சித்தரவதைக்குள்ளான எந்த அடையாளமும் இல்லை என்று பிரத பரிசோதனை நிபுணர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 22 வயதான ஒட்டோ வார்ம்பியர் கடந்த ஆண்டு வடகொரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது அந்நாட்டை உளவு பார்த்ததாகக் கூறி வடகொரிய அரசு அவரை கைது செய்தது.
இந்தக் குற்றச்சாட்டில் ஒட்டோ வார்ம்பியருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிறைத் தண்டனை அனுபவித்து வந்த வார்ம்பியரின் மூளை திசுக்களில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர் செயல்படாத நிலை ஏற்பட்டது. அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமானதைத் தொடர்ந்து வார்ம்பியர் வடகொரியாவிலிருந்து அமெரிக்கா அனுப்பப்பட்டார். இந்த நிலையில் கடந்த ஜுன் மாதம் அவர் மரணமடைந்தார்.
வார்ம்பியரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வடகொரியா வார்ம்பியரை சித்ரவதை செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வார்ம்பியரின் பெற்றோர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இந்த நிலையில் வார்ம்பியரிப்ன் உடலை பிரேத பரிசோதனை செய்த நிபுணர் கூறியதாவது, "வாம்பியர் உடலில் அவர் தாக்கப்பட்டதற்கான எந்த அடையாளமும் இல்லை. உடைந்த எழும்புகள், உடைக்கப்பட்ட பற்கள் போன்ற எந்தக் காயமும் இல்லை.
ஆனால் வார்ம்பியர் எதனால் மரணமடைந்தார் என்று கூறமுடியவில்லை. இதில் தொடர்புடைய நபர்கள் முன்வந்து கூறினால்தான் வார்ம்பியர் மரணத்திலுள்ள சந்தேகம் தீர்க்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT