Published : 27 Apr 2023 06:42 AM
Last Updated : 27 Apr 2023 06:42 AM
ஸ்டாக்ஹோம்: 2022-ம் ஆண்டில் இந்தியாவின் ராணுவ கட்டமைப்புக்கான செலவு 81.5 பில்லியன் டாலராக (ரூ.6.68 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. உலக நாடுகள் தங்கள் ராணுவக் கட்டமைப்பை வலிமைப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரையில் 2020-க்குப் பிறகு சீனாவுடன் எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா தனது ராணுவக் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ராணுவத்துக்கு இந்தியா செலவிடும் நிதி 2021-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022-ல் 6 சதவீதம் அதிகரித்துள்ளது.
சீனா, பாகிஸ்தான் உடனான எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில் ராணுவத்துக்கான இந்தியாவின் ஒதுக்கீடு அதிகரித்துள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்ட பட்டியலின்படி, ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. சென்ற ஆண்டில் அமெரிக்கா 877 பில்லியன் டாலர் (ரூ.72 லட்சம்கோடி) ராணுவத்துக்கு செலவிட்டுள்ளது. 2-ம் இடத்தில் உள்ள சீனா 292 பில்லியன் டாலரும் (ரூ.24 லட்சம் கோடி) 3-ம் இடத்தில் உள்ள ரஷ்யா 86.4 பில்லியன் டாலரும் (ரூ.7.06 லட்சம் கோடி) ராணுவத்துக்கு செலவிட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT