Last Updated : 26 Sep, 2017 12:38 PM

 

Published : 26 Sep 2017 12:38 PM
Last Updated : 26 Sep 2017 12:38 PM

மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு நடத்தப்படவில்லை

மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு எதும் நடத்தப்படவில்லை என்று அந்நாட்டுக்கான ஐ. நா. தூதர் தெரிவித்துள்ளார்.

மியன்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு நடைபெறுகிறது என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, ஐ. நா.பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், சவுதி உட்பட உலக நாடுகள் பல குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்தக் குற்றச்சாட்டை மியான்மர் தலைவர் ஆங் சாங் சூச்சி மறுத்து வந்த நிலையில்  மியான்மருக்கான ஐ. நா.  தூதர் ஹா டோ சுவானும் தற்போது இந்தக் குற்றச்சாட்டை  முற்றிலுமாக மறுத்துள்ளார்.

இதுகுறித்து சுவான் கூறும்போது, 'மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு நடக்கவில்லை. இனப் படுகொலையும் நடக்கவில்லை.  மியான்மர் தலைவர்கள் நீண்டகாலமாக சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள்.  நாங்கள் இன அழிப்பு, இன படுகொலைகளை தடுக்கும் நடவடிக்கைகளில்தான் இறங்குவோம்.

மேலும் அப்பாவி பொதுமக்களை பாதுகாப்பது, தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிடுவதுதான் ஒவ்வொரு அரசாங்கத்தின் கடமை” என்றார்.

மியான்மரில் சிறுபான்மையினராக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்து வருகின்றன. இதனால் ரோஹிங்கியா முஸ்லிம்கள்  தங்கள் சொந்த இடங்களை விட்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடியேறி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 25-ம்  தேதி முதல் 4 லட்சம்  ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்க தேசத்துக்கு அகதிகளாக இடப்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x