Published : 15 Sep 2017 04:58 PM
Last Updated : 15 Sep 2017 04:58 PM
ஈராக்கில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய சதிச் செயல்களில் 60 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில், ஈராக்கின் தென்பகுதியில் வியாழக்கிழமை நசிரியாக்ஹ் பகுதியில் உள்ள உணவு விடுதியில் நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த சோதனைஅ சாவடியில் காரில் குண்டை வெடிக்கச் செய்தனர். தீவிரவாதிகளின் இந்த அடுத்தடுத்த சதிச் செயல்களில் 60 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பான செய்தியை ஐஎஸ்ஸின் அதிகாரபூர்வ இணைய பக்கமான அமாக் இணையப் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT