Published : 17 Mar 2023 02:40 PM
Last Updated : 17 Mar 2023 02:40 PM

ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டில் பிரெட்டி புயலால் 326 பேர் உயிரிழப்பு

லிலோங்வே: ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியில் ஏற்பட்ட புயல் மற்றும் கனமழைக்கு இதுவரை 326 பேர் பலியாகினர்.

புயல் பாதிப்பு குறித்து மலாவி தேசிய பேரிடர் மேலாண்மை கூறும்போது, “பிரெட்டி புயலால் மலாவியின் தென்பகுதி மோசமாக பாதிப்படைந்துள்ளது. பல மாவட்டங்கள் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. புயலுக்கு இதுவரை 326 பேர் பலியாகி உள்ளனர்; பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

புயல் பாதிப்பு குறித்து மலாவியைச் சேர்ந்த பெண் கூறும்போது, “எல்லாமே பறிபோனது. காய்கறி விற்று சிறிய அளவில் வியாபாரம் செய்து வந்தேன். எனது கணவர் 2014 ஆம் ஆண்டே இறந்துவிட்டார். இந்த கடை மூலம்தான் எனது குழந்தைகளை காப்பாற்றி வந்தேன். இந்த நிலையில் புயல் அனைத்தையும் அழித்துவிட்டது” என்று தெரிவித்தார்.

பிரெட்டி புயல் மலாவி மட்டுமல்லாது, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சமாளிக்க சர்வதேச சமூகத்தின் உதவியை கோரி இருக்கிறார் மலாவி அதிபர் லாசரஸ். இதுகுறித்து அவர் கூறும்போது, ”தற்போது மழை நின்றிருக்கிறது. புயல் பாதித்த இடங்களில் உணவு வழங்க கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவை” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x