Published : 09 Mar 2023 01:31 PM
Last Updated : 09 Mar 2023 01:31 PM

5,000 மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரம் | கைது நடவடிக்கையை தொடங்கியது ஈரான்

தெஹ்ரான்: சுமார் 5,000 பள்ளி மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தில் கைது நடவடிக்கைகளில் ஈரான் இறங்கி உள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்வற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவப் பரிசோதனையில் அவர்களின் உடலில் நஞ்சு இருந்தது தெரிய வந்தது.

மாணவிகள் பயிலும் பள்ளிகளில் மர்ம பொருள் வீசப்பட்டதாகவும், அதிலிருந்து வெளியான நச்சு கலந்த காற்றை மாணவிகள் சுவாசித்தால் அவர்களின் உடலில் விஷம் கலந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இவ்விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்படும் என்றும் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்தார். இந்த நிலையில் இவ்விவகாரத்தில் முதல் கைது நடவடிக்கையை ஈரான் அரசு எடுத்துள்ளது.

இதுகுறித்து ஈரான் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “21 மாகாணங்களில் உள்ள 210 பள்ளிகளை சேர்ந்த 5,000 மாணவிகள் இந்த நச்சு விஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அபாயகரமான பொருளை பயன்படுத்திய குற்றத்திற்காக ஒரு மாணவியின் பெற்றோர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஷத்தின் வகை மற்றும் வைக்கப்பட்டடதற்கான காரணத்தை கண்டறிய பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை, எந்த வகையான விஷம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x