Published : 17 May 2017 02:41 PM
Last Updated : 17 May 2017 02:41 PM
வடகொரியாவின் அணுஆயுத ஏவுகணை சோதனைகள் பேரழிவுக்கானதகாவே பார்க்கப்படுகிறது என்று அமெரிக்கா கடற்படை தளபதி கூறியுள்ளார்.
வடகொரியாவின் இந்த நடவடிக்கை காரணமாக கொரிய தீபகற்பப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதற்கு அந்நாட்டிற்கு எச்சரிகையும் அவர் விடுத்தார்.
அமெரிக்க கடற்படை தளபதி ஹாரி ஹாரிஸ் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே மற்றும் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களுடான சந்திப்பிக்குப் பிறகு டோக்கியோவில் சிந்தனையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
அக்கூட்டத்தில் ஹாரி ஹாரிஸ் பேசும்போது,"வடகொரியா நடத்தும் அணுஆயுத ஏவுகணை சோதனைகள் மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை முன்னெப்போதும் இல்லாத வகையில் நவீனமாக உள்ளது”
மேலும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் குறித்து பேசும்போது, ”கிம் ஜோங் உன் ஆபத்தான தலைவர். அவரது பாதுகாப்பு நடவடிக்கைகள் பேரழிவுக்கானதாகவே பார்க்கப்படுகிறது" என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. இது புதுவிதமான ஏவுகணை சோதனை என்றும் இந்த ஏவுகணை 700 கிலோ மீட்டர் பாய்ந்து செல்லும் திறனுடையது என்றும் அந்நாடு தெரிவித்தது.
வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை தெரிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT