Published : 17 Feb 2023 02:02 PM
Last Updated : 17 Feb 2023 02:02 PM
அங்காரா: துருக்கி - சிரிய எல்லையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 44,000-ஐ நெருங்கிறது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், "துருக்கி - சிரிய எல்லையில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி மிகவும் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. 7.8 ரிக்டராக பதிவான அந்த பூகம்பம் ஏற்படுத்திய தாக்கத்தால் இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 44,000-ஐ நெருங்கிறது. இதில் துருக்கியில் 38,044 பேரும், சிரியாவில் 5,800 பேரும் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் இன்னமும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி 14 நாட்களாக தொடர்ந்து வருகிறது" என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் துருக்கியில் 260 மணி நேரங்களுக்குப் பிறகு 12 வயதான ஒஸ்மான் என்ற சிறுவன் மற்றும் இரண்டு இளைஞர்கள் மீட்கப்பட்டது மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
சிரியாவுக்கு வந்தடையும் உதவிகள்: முன்னதாக ஐ.நா. சபை சிரியாவுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தேவைப்படும் உதவிகளைச் செய்ய 397 மில்லியன் டாலர் தேவைப்படுவதாகவும் உலக நாடுகள் தாராளமாக உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது. மேலும், சிரிய அதிபர் பஷார் அல் அசாத், துருக்கி மற்றும் வடமேற்கு சிரியா இடையேயான பாப் அல் சலாம், அல் ரா ஆகிய இரண்டு எல்லைகளை நிவாரண உதவிகளை பெறுவதற்காக திறந்துவிடுவதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஐ.நா சபையின் 100 நிவாரண லாரிகள் சிரியாவை சென்றடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT