Published : 17 Feb 2023 11:33 AM
Last Updated : 17 Feb 2023 11:33 AM
வாஷிங்டன்: அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதை கண்டிக்கிறோம் என்று கூறி அமெரிக்க செனட் சபையில் ஒரு அரிதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வியாழக்கிழமை அமெரிக்க செனட் சபையில் தீர்மானத்தை மூன்று சக்திவாய்ந்த எம்.பி.க்கள் அறிமுகப்படுத்தினர். அதில், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. நாங்கள் இந்தியாவின் இறையாண்மை, பிராந்திய நேர்மையை மதிக்கிறோம். சீனா ராணுவ பலத்தைப் பயன்படுத்தி எல்லைப் பகுதியில் நடத்து அத்துமீறல்களைக் கண்டிக்கிறோம். சீன அத்துமீறல்கள், அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தியா மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகளைப் பாராட்டுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெஃப் மார்க்லே, பில் ஹாகர்டி, ஜான் கார்னின் ஆகியோர் கொண்டுவந்த இந்த தீர்மானம் இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில் அனைத்து வகையிலும் பேணுவோம் என்று உறுதியளிப்பதாக இருந்தது.
இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து சீனாவைக் கண்டித்த இந்த தீர்மானம் அரிதானதாகக் கருதப்படுகிறது. இந்தியாவுடன் சர்வதேச பிரச்சினைகளில் பல்முனை ஒத்துழைப்பு நல்குவோம் என்று குவாட் மாநாட்டின் மூலம் அமெரிக்கா உறுதியேற்றுள்ள நிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு பாராட்டும், ஒத்துழைப்பும் கூறிய அந்தத் தீர்மானம் சீனாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய எல்லையில் இரண்டு கிராமங்களை உருவாக்கியுள்ளது. சீனா மேலும் மேலும் தூண்டும் வகையில் எல்லையில் சர்ச்சைகளைக் கட்டவிழ்க்கிறது என்று அமெரிக்கா கண்டித்துள்ளது. அமெரிக்காவின் இந்த அரிதான தீர்மானம் உலக நாடுகளின் கவனம் ஈர்த்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...