Published : 16 Feb 2023 06:14 AM
Last Updated : 16 Feb 2023 06:14 AM

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயருகிறது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தீவிரமாகியுள்ளது. இதனால், எண்ணெய் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு பாகிஸ்தான் அரசு ஆளாகியுள்ளது.

இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறியது:

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.32.07 அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ரூ.250-க்கு விற்பனை செய்யப்படும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.282-ஆக அதிகரிக்கும். அதேபோன்று, டீசலும் லிட்டருக்கு ரூ.32.84 உயர்த்தப்படும் நிலையில் அதன் விலை ரூ.262.8-லிருந்து ரூ.295.64-ஆகஅதிகரிக்கும். இவை தவிர, மண்ணெண்ணெய் விலையையும் லிட்டருக்கு ரூ.28.05 உயர்த்தப்பட்டு ரூ.217.88-ஆக நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வர அதிக வாய்ப்புள்ளது.

இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக பாகிஸ்தான் அரசு, இம்மாதத்தில் முதல் 2 வாரங்களில் பெட்ரோல், டீசல்விலையை லிட்டருக்கு ரூ.35அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x