Published : 01 Feb 2023 04:53 AM
Last Updated : 01 Feb 2023 04:53 AM

அமெரிக்காவில் கருப்பின இளைஞரை தாக்கியதால் உயிரிழப்பு - 7 போலீஸார் பணியிடை நீக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 7 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், 3 தீயணைப்பு வீரர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். தாக்குதல் நடத்திய போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டென்னசே மாகாணத்தை சேர்ந்த மெம்பிஸ் நகரில் டைரே நிக்கோலஸ்(29) என்ற கருப்பின இளைஞர் கடந்த ஜனவரி 7-ம் தேதி தனது காரை வீட்டிலிருந்து தாறுமாறாக ஓட்டிச்சென்றுள்ளார். அவரது வாகனத்தை வழிமறித்து நிறுத்திய போலீஸார் டைரே நிக்கோலஸை கண்மூடித்தனமாக தாக்கினர். முகத்தில் மிளகு ஸ்பிரே அடித்தனர். வீட்டுக்கு தப்பியோட முயன்ற இளைஞரை போலீஸார் விரட்டிப்பிடித்து, தீயணைப்பு படையினர் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தனர். 3-வது நாளில் அந்த நபர் இறந்தார். இச்சம்பவத்துக்கு அமெரிக்காவில் கடும் கண்டனம் எழுந்தது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மெம்பிஸ் போலீஸ் நிர்வாகம், இந்த தாக்குதலில் தொடர்புடைய 7 போலீஸாரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளது. இவர்களில் 5 பேர் கருப்பினத்தவர்கள். இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட டைரே நிக்கோலஸின் உடல் நிலையை மதிப்பீடு செய்து போதிய மருத்துவ உதவிகளை வழங்காத காரணத்துக்காக தீயணைப்பு வீரர்கள் 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

2021-ம் ஆண்டு உருவாக்கியது: மோசமான குற்றங்களில் ஈடு படும் நபர்களை விரட்டிப்பிடிக்க ‘ஸ்கார்பியன்ஸ்’ என்ற பெயரில் அதிரடிப்படையை மெம்பிஸ் காவல்துறை 2021-ம் ஆண்டு உரு வாக்கியது. இந்தப் படையைச் சேர்ந்தவர்கள்தான் நிக்கோலஸ் மீது தாக்குதல் நடத்தினர். இந்தப் படை தற்போது கடும் கண்டனத்துக்கு ஆளாகியதால், ஸ்கார்பியன் படையை நிரந்தரமாக கலைப்பதாக மெம்பிஸ் காவல் துறை அறிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x