Published : 01 Feb 2023 05:20 AM
Last Updated : 01 Feb 2023 05:20 AM
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் உள்ள பல கோயில்களில் சமீப காலமாக தாக்குதல் நடத்தப்படுகின்றன. இந்த விஷயத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். கோயில்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசை இந்திய அரசு வலியறுத்தி வருகிறது.
இந்நிலையில், மெல்போர்ன் நகரில் உள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோயிலில் காலிஸ்தான் பிரி வினைவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். மேலும் கோயில் சுவர் களை சேதப்படுத்தி, காலிஸ்தான் ஆதரவு படங்கள், வாசகங்களை எழுதினர். இந்தத் தாக்குதலில் சிலர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தாக்குதல் நடந்த சிவா விஷ்ணு கோயிலுக்கு ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதர் மன்பிரீத் வோரா நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு இந்துக்களிடம் கலந்துரை யாடினார்.
பின்னர் இந்திய தூதர் மன்பிரீத் வோரா கூறும் போது, ‘‘வழிபாட்டு தலங்களில் அனைத்து சமூகத்தினரும் மதித்து நடந்து கொள்கின்றனர். அவரவர் நம்பிக்கைகளுக்கு உணர்வு களுக்கு மதிப்பளிக்கின்றனர். ஆனால், கோயில் மீது காலிஸ் தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியது ஏற்க முடியாதது. கடும் கண்டனத்துக்கு உரியது. இந்த விஷயத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் வெற்றி பெற முடியாது’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT