Published : 10 Dec 2016 02:12 PM
Last Updated : 10 Dec 2016 02:12 PM
இந்தோனேசியாவில் புதன்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் சுமார் 45,000 பேர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் புதனன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 100 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலநடுக்கத்துக்கு சுமார் 45,000 பேர் தங்களது வீடுகளை இழந்துள்ளதாக இந்தோனேசியா அரசு கூறியுள்ளது.
இது குறித்து இந்தோனேசிய தேசிய பேரிடர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "நிலநடுக்கம் காரணமாக சிக்கிக் கொண்ட மக்களை மீட்ட போது ஏராளமான மக்கள் தங்களது உடைமைகளை இழந்துள்ளது தெரிய வந்தது.
மீட்கப்பட்ட மக்கள் மசூதிகளிலும், பள்ளிக் கூடங்களிலும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில இடங்களில் மீட்புப் பணிகள் மோப்ப நாய்களின் உதவியுடன் நடந்து வருகிறது. 11,000 கட்டிடங்கள் வரை முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளது" என்று கூறினார்.
உதவிகரம் நீட்டிய ஆஸ்திரேலியா
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசிய அரசுக்கு ஆஸ்திரேலியா அரசு நிவாரணப் பணிகளுக்காக ஒரு மில்லியன் டாலரை அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT