Published : 28 Dec 2016 10:28 AM
Last Updated : 28 Dec 2016 10:28 AM
பாகிஸ்தானில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, நச்சுப்பொருள் கலந்த சாராயம் குடித்து 32 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாகிஸ்தானில் மதுபானம் சட்டப்பூர்வமாக விற்கப்பட்டா லும், முஸ்லிம்கள் மது அருந்த வும், வாங்கவும் தடை விதிக்கப் பட்டுள்ளது. வெளிநாட்டினர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கான மது விற்பனையிலும் கடுமையான கட்டுப்பாட்டுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
பணக்கார பாகிஸ்தானியர்கள் அதிக விலையில் வெளிநாட்டு மது வகைகளை வாங்கிக் குடிக்கின்ற னர். ஆனால், வசதியில்லாத ஏழைகள், மெத்தனால் போன்ற அபாயகரமான நச்சுப் பொருட்களு டன் கள்ளத்தனமாக காய்ச்சி விற்கப்படும் சாராயத்தைக் குடிக்கின்றனர்.
இதனால் விஷச்சாராயத்துக்கு பலியாகும் சம்பவங்கள் அவ்வப் போது நிகழ்கின்றன. இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் இருந்து தெற்கே, 338 கிமீ தொலைவில் உள்ள தோபா தேக் சிங் நகரின், கிறிஸ்டியன் காலனியில் நேற்று விஷச் சாராயம் அருந்தி 32 பேர் பலியானார்கள்.
பலியானவர்களில் 30 பேர் கிறிஸ் தவர்கள். மற்ற 2 பேர் முஸ்லிம்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, முபாரகாபாத் பஸ்தி யில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட சாராயம் அருந்தி இவர்கள் இறந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதே மதுவகையை அருந்திய மேலும் 50-க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT