Published : 16 Jan 2023 07:52 AM
Last Updated : 16 Jan 2023 07:52 AM
போக்கரா: நேபாள நாட்டில் 72 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் போக்கரா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது விபத்துக்குள்ளானதில் 5 இந்தியர்கள் உள்பட 68 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்துக்கு சில நொடிகள் முன்னர் விமானத்தில் பயணித்த பயணி எடுத்த லைவ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
யெட்டி விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று 68 பயணிகள், 4 விமானப் பணியாளர்கள் என 72 பேருடன் நேபாளத்தில் உள்ள போக்கரா விமான நிலையத்தில் தரையிறங்கச் சென்றது. அப்போது, விமானம் திடீரென தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில், 68 பேர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 5 பேர் இந்தியர்கள். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில் விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தரையிறங்கும் காட்சியை லைவ் வீடியோவாக பதிவு செய்துள்ளார். சில நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவின் இறுதி சில நொடிகள் அதிர்ச்சிகரமாக உள்ளது. இந்த விபத்து குறித்து விசாரிக்க நேபாள அரசு குழு அமைத்துள்ளதாக தெரிகிறது. அதோடு இன்று ஒருநாள் துக்கமும் அந்த நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல். அமைச்சரவை கூட்டமும் கூட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், 2 தென் கொரியர்கள் மற்றும் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அர்ஜென்டினா, அயர்லாந்தை சேர்ந்த தலா ஒருவர் என 15 வெளிநாட்டு பயணிகள் பயணித்துள்ளதாக யெட்டி விமான நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian passenger's Live video captures Nepal plane crash from inside.During the Nepal plane accident,a passenger who was the victim of the accident was doing Facebook Live#planecrash #NepalPlaneCrash #Pokhara #Nepal #aviation #ATR72 #AirCrash #pokharaplanecrash #PokharaAirport pic.twitter.com/veCqbTGz0m
— Nalin Bhardwaj (@NALINbhr) January 15, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT