Published : 31 Dec 2016 04:04 PM
Last Updated : 31 Dec 2016 04:04 PM
ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி உயிருடன் இருப்பதாக அமெரிக்க ராணுவத் தலைமைச் செயலகம் பென்டகன் கூறியுள்ளது.
ஐ.எஸ். இயக்கத்தின் தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அபுபக்கர், தன்னைப் பற்றிய பிற எந்த விவரத்தையும் வெளியிடாமல் பாதுகாத்து வருகிறார்.
அண்மையில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் அபுபக்கர் அல்-பாக்தாதி உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயம் அடைந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த தகவல்களை அமெரிக்க தரப்பு உறுதி செய்யவில்லை.
இந்த நிலையில் அபுபக்கர் அல்-பாக்தாதி கடந்த மாதம் ஒலி நாடா ஒன்றை வெளியிட்டார்.
இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமைச் செயலகம் பென்டகனின் செய்தி தொடர்பாளர் பீட்டர் குக் கூறும்போது, "ஐஎஸ் இயக்க தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி உயிருடன் இருப்பதாக நாங்கள் எண்ணுகிறோம். அவரது அனைத்து நடவடிக்கையும் கண்காணித்து வருகிறோம்.
நிதி கிடைப்பதற்கான அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். அதற்காக நிறைய நேரத்தை ஒதுக்க வேண்டும்" என்று கூறினார்.
தனித்துவிடப்பட்ட அபுபக்கர்
ஐஎஸ் தலைவர்களின் உயிரிழப்புகளால் அபுபக்கர் அல் பாக்தாதி தனித்து விடப்பட்டுள்ளதாக குக் தெரிவித்தார்.
அபுபக்கர் அல் பாக்தாதியின் தலைக்கு 25 மில்லியன் டாலர்களை அமெரிக்கா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT