Published : 12 Jan 2023 03:54 PM
Last Updated : 12 Jan 2023 03:54 PM

பிலிப்பைன்ஸ்: இறைச்சியை விட வெங்காயம் விலை மூன்று மடங்கு அதிகம்

பிரதிநிதித்துவப் படம்

மணிலா: பிலிப்பைன்ஸில் இறைச்சியை விட வெங்காயம் மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவது அந்நாட்டு மக்களை கவலையடையச் செய்துள்ளது.

பிலிப்பைன்ஸில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து உள்நாட்டு உற்பத்தி, விநியோகம் குறைந்து வருவதாலும், அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் மார்ச் மாதத்திலிருந்து சுமார் 22,000 டன் காய்கறிகளை பிலிப்பைன்ஸில் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்று விவசாய நல அமைப்புகள் கூட்டாக தெரிவித்துள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாட்டின் உள்ளூர் உணவுகளில் வெங்காயம் பிரதானமாக உள்ளது. பெரும்பாலான உணவுப் பொருட்களில் வெங்காயம், பூண்டு ஆகியவை பிரதானமாக சேர்க்கப்படுகிறது. பிலிப்பைன்ஸில் மட்டும் சராசரியாக மாதத்திற்கு சுமார் 17,000 மெட்ரிக் டன் காய்கறிகள் தேவைப்படுகிறது. இந்த நிலையில்தான் மக்களின் முக்கிய காய்கறிகளில் ஒன்றான வெங்காயம் கிலோவுக்கு 600 பிசோஸ் (இந்திய மதிப்பு ரூ 2,588) என்ற விலையில் பிலிப்பைன்ஸில் விற்படுகிறது. இது அந்நாட்டில் விற்கப்படும் மாட்டிறைச்சி மற்று பன்றி இறைச்சியை விட மூன்று மடங்கு அதிகம்.

விலையேற்றத்திற்கு காரணம்? - காய்கறிகளின் விலைவாசி உயர்வு என்பது பதுக்கல் போன்ற நடவடிக்கைகளால் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதால் இதுவே பிரதானமான காரணமாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாது, உலகளாவில் நிலவும் பணவீக்கம் பல்வேறு நாடுகளின் உற்பத்தி திறனையும், விநியோக திறனையும் பாதித்துள்ளது. இதுவே பிலிப்பைன்ஸிலும் எதிரொலித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ரஷ்யா - உக்ரைன் போரினால் சர்வதே பகுதிகளில் போக்குவரத்து பாதிப்புகள் நீடிப்பதும், தீவிர காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களாலும் உலகளவில் பல்வேறு நாடுகளில் உணவு விலைகள் அதிகரித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x