Published : 04 Jan 2023 08:51 AM
Last Updated : 04 Jan 2023 08:51 AM
ஷாங்காய்: சீனாவில் கரோனா ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒமிக்ரான் வகை வைரஸ் படுவேகமாக பரவி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவில் கடந்த மாதம் கரோனா கட்டுப்பாடுகள் திடீரென தளர்த்தப்பட்டன. இதனால் கரோனா வேகமாக பரவியது. மருத்துவமனைகளில் அனுமதிக் கப்படும் நோயாளிகளின் எண் ணிக்கையும் அதிகரித்தது.
மேலும் கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளதாகத் தக வல்கள் வெளியாகி வருகின்றன. சடலங்களை எரிக்கும் தகன மையங்களில் வரிசையாக சடலங் கள் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது.
இந்நிலையில் ஷாங்காயில் உள்ள ருய்ஜின் மருத்துவமனை துணைத் தலைவரும், ஷாங்காய்கரோனா வைரஸ் நிபுணர் ஆலோசனைக் குழு உறுப்பினருமான டாக்டர் சென் எர்சென், டாஜியாங்டாங் ஸ்டுடியோ பத்திரிகைக்கு நேற்று பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: சீனாவில் வேகமாக கரோனா ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது. பல்வேறு மாகாணங்களில் பொதுமக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, 70 சதவீதஷாங்காய் நகர மக்கள் வரும் 2 மாத காலத்தில் கரோனாவால் பாதிக்கப்படலாம் எனத் தெரியவந்துள்ளது.
ஷாங்காயில் 2.5 கோடி மக்கள்வசிக்கின்றனர். இங்கு கரோனா வேகமாக பரவுவதால் இதில் சுமார் 1.75 கோடி மக்கள் கரோனாவால் பாதிக்கப்படும் நிலை வரலாம். வரும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்த அளவுக்கு கரோனா பாதிப்பு அதிகரிக்கக்கூடும்.
தினமும் 1,600 பேர் அனுமதி: இதேபோல் பெய்ஜிங், டியான்ஜின், சாங்கிங், குவாங்ஜு உள்ளிட்ட நகரங்களிலும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. ஷாங்காய் மருத்துவமனையில் மட்டும் தினந்தோறும் புதிதாக 1,600 பேர் அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் கரோனா நோயாளிகளை ஏற்றிக் கொண்டு நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவமனைக்கு வருகின்றன. 65 வயதுக்கு மேற்பட்டோர் அதிக அளவில் இந்த வகை ஒமிக்ரானால் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய சுகாதார ஆணைய (என்எச்சி) அதிகாரி ஜியோவோ யாஹுய் கூறும்போது, “கிராமப் பகுதிகளிலும் இந்த வைரஸ் பரவினால் அதை சமாளிப்பது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். கரோனாவால் பாதித்தவர்கள், இறந்தவர்கள் விவரங்களைஇணையதளத்தில் அதிகாரப் பூர்வமாக அரசு வெளியிட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT