Last Updated : 01 Dec, 2016 10:28 AM

 

Published : 01 Dec 2016 10:28 AM
Last Updated : 01 Dec 2016 10:28 AM

சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட விதிக்கப்பட்ட தடை விலக வேண்டும்: இளவரசர் அல்வாலீத் வலியுறுத்தல்

சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட விதிக்கப்பட்டுள்ள தடைக்கு அவசர முடிவு கட்ட வேண்டும் என, சவுதி இளவரசர் அல்வாலீத் பின் தலால் கூறியுள்ளார்.

சவுதியில் பெண்களுக்கு எதிரான பலவிதமான கட்டுப்பாடு கள் நடைமுறையில் உள்ளன. அதில் முக்கியமானது, வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை யாகும். உலகில் வேறெந்த நாட்டி லும் இல்லாத வகையில், சவுதி யில் மட்டுமே பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட் டுள்ளது.

இதற்கு எதிராக, பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்தும், போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியும் வரு கின்றன. இந்நிலையில், சவுதி அரச பரம்பரையில் பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் இளவரசர் அல்வாலீத் பின் தலால், இப்பிரச்சினைக்கு விரைந்து முடிவுகட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் வலைப் பக்கத்தில் இதுகுறித்து நேற்று பதிவிட்ட இளவரசர் அல்வாலீத், ‘விவாதத்தை நிறுத்துங்கள். இது, பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான நேரம்’ எனக் கூறி போர்க்கொடி உயர்த்தி யுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அல்வாலீத்தின் அலுவலகம் வெளி யிட்ட அறிக்கையில், ‘பெண்களை கார் ஓட்டக் கூடாது என்பது, அவர்களுக்கு கல்வி அல்லது சுதந்திரத்தை அளிக்க மறுப்பது போன்றது. வாகனம் ஓட்டுவதும் ஒரு அடிப்படை உரிமைதான்.

பெண்கள் கார் ஓட்ட தடை செய்வது, அவர்களுக்கான செல வினங்களை அதிகரிக்கச் செய் கிறது. வெளி நபர்களை ஓட்டுநர் பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு தனியாக சம்பளம் தர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

கணவன்மார்கள், தங்களின் மனைவிக்கு கார் ஓட்ட வேண்டு மானால், அவர்கள் அலுவலக வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு வர வேண்டும். இதனால், மனித உழைப்பு பாதிக்கப்பட்டு, நாட்டின் உள்நாட்டு உற்பத்தியும் பலவீன மாகும். தற்போதைய பொருளா தார சூழலில், பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதிப்பது சரியல்ல. இதற்கு அவசரமாக ஒரு முடிவுகட்ட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

சவுதி அரச பரம்பரையில் வழக்கத்துக்கு மாறான சிந்தனை போக்கு கொண்டவராக கருதப்படு பவர் அல்வாலீத். பொதுவாகவே மக்கள் மீதான அபிமான உணர் வுள்ளவரான இவர், பெண்ணிய வாதியாகவும் அறியப்படுகிறார்.

அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் கள் என்றாலும், அரசியல் பதவி எதையும் அவர் வகிக்கவில்லை. எனினும், சிட்டி குரூப், டிஸ்னி உட்பட உலகின் பெரிய நிறு வனங்கள் அனைத்திலும் பங்கு வைத்துள்ள வணிக சாம்ராஜ்ய மான கிம்டம் ஹோல்டிங் கம் பெனியின் தலைவராக அல்வாலீத் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x