Published : 22 Dec 2016 09:38 AM
Last Updated : 22 Dec 2016 09:38 AM
ஜப்பானின் சுருகா பகுதியில் மோஞ்சு அணு உலை சோதனை அடிப்படையில் செயல்பட்டு வந்தது.
22 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த அணு உலை தொடங்கப்பட்டது. ஆனால் தொடங்கப்பட்டதிலிருந்து இது வரை 250 நாட்கள் மட்டுமே இயங்கி உள்ளது.
கனவு அணு உலை என்கிற வகையில் வர்ணிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த மோஞ்சு அணு உலையில் புளுட்டோனியம், யுரேனியக் கலவையை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
ஆனால் எதிர்பார்த்த வகையில் அந்த அணுஉலையால் பயன் ஏற்படவில்லை. அணுஉலையின் பராமரிப்புச் செலவு அளவுக்கு அதிகமாக இருந்தது. இதனால் பெருமளவில் அரசு நிதி விரயமானது. எனவே இந்த அணுஉலையை மூடி விட ஜப்பான் அமைச்சரவை நேற்று முடிவு செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT