Published : 21 Dec 2022 11:43 AM
Last Updated : 21 Dec 2022 11:43 AM

கலிபோர்னியாவில் நிலநடுக்கம்: 2 பேர் பலி: பலர் காயம்

நில நடுக்கத்தினால் வீடு சேதமடைந்துள்ள காட்சி

நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கடலோரப் பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்கத்துக்கு இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், ”கலிபோர்னியா மாகாணத்தில் வடக்கு கடலோரப் பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியது. நிலநடுக்கத்தின் ஆழம் 16 கிமீ ஆகும். சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்துக்கு இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்கள் தரப்பில், “நிலநடுக்கம் காரணமாக வீடுகள் சற்று ஆட்டம் கண்டன. இதனால் நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் மட்டும் 70,000 வீடுகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தண்ணீர் இல்லாமல் மக்கள் சிரமத்தில் உள்ளனர்.” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

”நிலநடுக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. உடனடி தேவை என்றால் மட்டும் அவசர எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்” என்று அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், கலிபோர்னியாவில் நிலைமை விரைவில் சரியாகும். மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என கலிபோர்னியா மாகாண அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x