Published : 12 Dec 2022 11:35 AM
Last Updated : 12 Dec 2022 11:35 AM
நியூயார்க்: உலகின் சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவாகி வருகிறது. அதனால் இந்தியாவை ஐ.நா. கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக கணக்கில் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய லாவ்ரோவ், "இன்றைய பல்முனை உலகில் இந்தியா நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சக்தி. பொருளாதார வளர்ச்சி ரீதியாக விரைவில் இந்தியா ஒரு முக்கியமான முன்னணி நாடாக உருவாகலாம். ஏன் தலைவராகக் கூட ஆகலாம். பல்வேறு பிரச்சினைகளையும் கையாள்வதில் இந்தியாவிற்கு தூதரக அனுபவம் அதிகம். இந்தியா உலக அரங்கில் தனக்கென ஓர் ஒப்பற்ற இடத்தைக் கொண்டுள்ளது. ஐ.நா.வில் ஈடுபாட்டுடன் இந்தியா பணியாற்றி வருகிறது. தெற்காசியாவில் பல்வேறு ஒருங்கிணைக்கும் கட்டமைப்பு பணியையும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் இணைந்து சிறப்புடன் செய்து வருகிறது. வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவின் மக்கள் தொகை விரைவில் பெரிய அளவில் அதிகரிக்கலாம். அதுவே அதற்கு பலமாகலாம். இந்தியாவை ஐ.நா. கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக கணக்கில் கொள்ள வேண்டும்" என்றார்.
India is one of the leading countries in terms of economic growth, maybe even the leader. Its population will soon be bigger than any other country. India has vast diplomatic experience in settling various kinds of problems: Russian Foreign Minister Sergey Lavrov pic.twitter.com/WDQFVxiydn
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10 தற்காலிக உறுப்பு நாடுகளும் உள்ளன. தற்காலிக உறுப்பு நாடுகள் 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த அமைப்புக்கு மாதத்துக்கு ஒரு உறுப்பு நாடு தலைமை வகிக்கும். அந்த வகையில் டிசம்பர் மாதத்துக்கு தலைமை தாங்கும் இந்தியா, வரும் 14, 15-ம் தேதிகளில் 2 முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளது. இதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமை தாங்க உள்ளார். குறிப்பாக, 15-ம் தேதி ‘சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு அணுகுமுறை கொள்கைகள் மற்றும் முன்னோக்கிய பாதை’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT