Published : 18 Nov 2016 05:44 PM
Last Updated : 18 Nov 2016 05:44 PM
ஒபாமாவின் ஆட்சி முறையை கடுமையாக விமர்சித்த முன்னாள் புலனாய்வு மைய இயக்குநர் மைக்கேல் பிளின்னை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமித்துள்ளார் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப்.
மைக்கேல் பிளின் அமெரிக்க அதிபர் ஒபாமாவால் 2012- ம் ஆண்டு அமெரிக்க புலனாய்வு மைய இயக்குநராக நியமிக்கப்பட்ட பிளின். அதன்பின் இரண்டு ஆண்டுகள் இந்தப் பதவியில் நீடித்து அதன்பின் ராஜினாமா செய்தார்.
அதனை தொடர்ந்து மைக்கேல் பிளின் ஒபமாவின் ஆட்சி முறை குறித்தும், உலக நாடுகளின் விவகாரத்தில் ஒபாமாவின் அணுமுறை குறித்தும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
ஐஎஸ் தீவிரவாத அமைப்பை அழிப்பதற்காக அமெரிக்கா எடுத்த போர் நடவடிக்கை குறித்தும் வெகுவாக சாடினார் பிளின்.
அத்துடன் அமெரிக்க பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் குறித்து டொனால்டு ட்ரம்புக்கு தேர்தல் பிரச்சார காலங்களிலும் ஆலோசனை வழங்கினார்.
இந்த நிலையில் மைக்கேல் பிளின்னை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக டொனால்டு ட்ரம்ப் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT