Published : 10 Nov 2022 06:27 AM
Last Updated : 10 Nov 2022 06:27 AM
காத்மாண்டு: நேபாளத்தின் டோட்டி மாவட்டத் தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி, மணிப்பூரிலும் உணரப்பட்டது.
மத்திய நேபாளம் கூர்கா பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நில நடுக்கத்துக்கு 9,000 பேர் வரை உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT