Published : 10 Nov 2022 06:49 AM
Last Updated : 10 Nov 2022 06:49 AM
லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய ரூ.13,500 கோடி கடனை வைர வியாபாரி நீரவ் மோடி திருப்பிச் செலுத்தவில்லை. அவர் 2018-ல் லண்டன் தப்பிச் சென்றார். அவர் மீது சிபிஐ, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளன. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, நீரவ் மோடியை ஒப்படைக்கக் கோரி வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி சாம் கூஸ், நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து நீரவ் மோடி சார்பில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் நாடு கடத்த கூடாது என அதில் கோரப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில், நீதிபதிகள் ஜெரிமி ஸ்டூவர்ட்-ஸ்மித் மற்றும் ராபர்ட் ஜே ஆகியோர் மேல்முறையீட்டு மனுவை நேற்று தள்ளுபடி செய்தனர். அத்துடன் இந்தியாவில் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்கொள்ள வசதியாக நீரவ் மோடியை நாடு கடத்தலாம் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT