Published : 13 Nov 2016 11:33 AM
Last Updated : 13 Nov 2016 11:33 AM
ஆப்கானிஸ்தானில் காபூல் அருகே உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை குறிவைத்து தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 4 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானின், பர்வான் மாகாணத்துக்கு உட்பட்ட பக்ராம் நகரில் அமெரிக்க விமானத் தளம் உள்ளது. இத்தளத்தின் உணவகப் பகுதியின் அருகே மர்ம நபர் உடலில் கட்டியிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.
இதில் 4 பேர் உடல் சிதறி பலியாகினர். 14 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக நேட்டோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவத் தளத்தில் உணவகப் பணியாளராக வேலை செய்து வந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நபரின் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக் கப்படுகிறது. இந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு, தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ள னர்.
இத்தாக்குதலில் பலியானவர் கள் எந்தெந்த நாட்டைச் சேர்ந்த வர்கள் என்பது உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய ராணுவத் தளமாக பக்ராமில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளம் திகழ்கிறது.
அமெரிக்காவின் புதிய அதிப ராக டொனால்டு ட்ரம்ப் தேர்ந் தெடுக்கப்பட்ட சில நாட்களிலேயே இத்தாக்குதலை தலிபான் தீவிரவாதிகள் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT