Published : 01 Nov 2016 06:21 PM
Last Updated : 01 Nov 2016 06:21 PM
சீன நிலக்கரி சுரங்க வெடிப்பு விபத்தில் சிக்கிய 33 பணியாளர்களில் 13 பேர் பலியானதாவும், 20 பேரை காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து சின்குவா ஊடகம் வெளியிட்ட செய்தியில், "இரவு பகலாக நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்க மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இதுவரை 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. காணாமல்போன 20 பேரின் நிலைமை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோங்கிங் பகுதியின் துணை மேயர் மீட்புப் பணிகள் குறித்து கூறும்போது, "மீட்புப் பணி வீரர்கள் தொடர்ந்து தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. எங்களுக்கு நம்பிக்கை உள்ளது காணாமல் போன 20 பேரை மீட்போம்" என்று கூறினார்.
முன்னதாக, திங்கட்கிழமை சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் 33 பணியாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்து ஏற்பட்டதற்கான இதுவரை கண்டறியப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT