Published : 15 Nov 2016 04:17 PM
Last Updated : 15 Nov 2016 04:17 PM
ஜப்பானில் ஃப்யூகியோகா நகரத்தில் சாலையின் நடுவே ஏற்பட்ட பெரும்பள்ளத்தை 48 மணி நேரத்தில் சரிசெய்துள்ளது அந்நாட்டு அரசு நிர்வாகம்.
ஃப்யூகியோகா நகரத்தின் முக்கிய ரயில் நிலையத்தின் வெளிப்புறப் பகுதியில் சாலையின் நடுவே கடந்த நவம்பர் 8-ம் தேதி அதிகாலை பெரும்பள்ளம் ஒன்று ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்தக் குழியால் சில மணி நேரம் அந்தப் பகுதியில் மின்சார இணைப்புகள், தொலைபேசி சேவை, நீர் சேவை, கேஸ் இணைப்புகள் போன்றவை நிறுத்தப்பட்டன. இந்தப் பெரும்பள்ளத்தால் பொது மக்கள் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், சாலையில் கிட்டதட்ட 30 மீட்டர் ஆழத்துக்கு ஏற்பட்ட பெரும்பள்ளத்தை ஃப்யூகியோகா நகர சாலைப் பணியாளர்கள் 48 மணி நேரத்துக்கு சரிசெய்து அந்த நகர மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த அந்த நகரவாசி ஒருவர் கூறும்போது, "ஒரு வாரத்துக்குள் சாலை சரி செய்து இருப்பது மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இவ்வளவு விரைவாக சாலையை சீரமைப்பு செய்த பணியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT