Published : 28 Sep 2022 01:25 PM
Last Updated : 28 Sep 2022 01:25 PM
அன்காரா: ஹிஜாப்புக்கு எதிராக போராடும் ஈரான் பெண்களுக்கு ஆதரவாக துருக்கி பாடகி மெலக் மோஸ்சோ மேடை நிகழ்ச்சியின் போது தனது முடியை வெட்டிக் கொண்டார்.
ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.கடந்த 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார்.
அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் முன்னெடுக்க காரணமாகியுள்ளது. அங்கு லட்சக்கணக்கான பெண்கள் துணிச்சல் மிகு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 70-க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர். இந்த நிலையில் பத்து நாட்களுக்கு மேலாக ஈரானில் போராட்டம் தொடர்ந்து வருகின்றது.
ஈரானில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக சர்வதேச அளவில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் துருக்கியைச் சேர்ந்த பிரபல பாடகி மெலக் மோஸ்சோ மேடை நிகழ்ச்சி ஒன்றில் ஈரான் பெண்களுக்கு ஆதரவாக தனது முடியை வெட்டினார். இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலானது.
Turkish singer @MelekMosso cuts off her hair on stage in solidarity with the Iranian women. Thank you Melek!#MahsaAmini #مهسا_امینی #IranProtests2022 pic.twitter.com/ZjISxjGkAL
— Omid Memarian (@Omid_M) September 27, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT